ஒரு ஆசிரமத்தில் குரு, தன் சீடர்களில் இருவரைக் கூப்பிட்டு ஒரு மலர் தோட்டத்தைக் காண்பித்து, அதனுள் சென்று அங்கு இருக்கும் மலர்களிலே மிகச் சிறந்த ஒரே ஒரு மலரைப் பறித்து வர வேண்டும். போன வழியில் திரும்பக் கூடாது. என்று கூறினார். முதல் சீடன் மலர் தோட்டத்திலே நுழைந்து சற்று நேரம் கழித்து ஒரு மலரைப் பறித்துக் கொண்டு வந்தான். பின் அடுத்தவன் சென்று ஒரு மலரைப் பறித்துக் கொண்டு வந்தான். குரு முதலாமவனைப் பார்த்து, “ நீ பறித்ததுதான் அங்கிருந்தவைகளிலேயே சிறந்த மலரா?” என்று வினவினார். அவன், “இல்லை குருவே, நான் மலர் தோட்டத்தில் நுழைந்தவுடன் இந்த மலரைப் பார்த்தேன். இதுவே சிறந்த மலராகத் தோன்றியது. பறித்துக்கொண்டேன். ஆனால் மேலும் செல்லச் செல்ல இன்னும் சிறந்த மலர்கள் இருந்தன.” என்று கூறினான். அடுத்தவனிடமும் குரு அதே கேள்வியைக் கேட்டார். அவன், “இல்லை குருவே, நான் மலர் தோட்டத்தில் நுழைந்ததுமுதல் பல சிறந்த மலர்களைப் பார்த்தேன், இன்னும் சிறந்த மலர் இருக்கலாம் என்று எண்ணி கடைசிவரை சென்றுவிட்டேன், திரும்பி வரக் கூடாது என்பதால் கடைசியில் இருந்த இந்த மலரை பறிக்க நேர்ந்தது.” என்று கூறினான்.
குரு, “நீங்கள் இருவருமே சரியானதைச் செய்ய வில்லை, அவசரப்பட்டு முதலில் கிடைப்பதை ஏற்பதுவும், காலந்தாழ்த்தி சரியானவைகளைப் பெறாமல் விடுவதுவும் தவறானவையே, நீங்கள் இருவருமே தவறிழைத்தீர்கள்.” என்று கூறி இருவரையுமே விரட்டி அடித்தார்Team Sprit???
5:01 PM |
ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அவர் ஒரு வித்தியாசமான காட்சியைக் கண்டார். ஒருவர் சாலை ஓரத்தில் குழி தோண்டிக்கொண்டு சென்றார். மற்றொருவர் அதை மூடிக் கொண்டே சென்றார்.
இவருக்கு மிகுந்த ஆச்சரியம். அவர்களிடம் சென்று
“நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?” என்று வினவினார். அவர்கள், “நாங்கள் மூன்று பேர் ஒரு வேலையைச் செய்ய வேண்டும். ஒருவர் குழி வெட்ட வேண்டும், ஒருவர் மரக்கன்றை நட வேண்டும், மூன்றாமவர் குழியை மூட வேண்டும், இன்று மரம் நடுபவர் விடுப்பில் சென்று விட்டார். நாங்கள் எங்கள் வேலையை விடாமல் செய்கிறோம்” என்றனர்
“நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?” என்று வினவினார். அவர்கள், “நாங்கள் மூன்று பேர் ஒரு வேலையைச் செய்ய வேண்டும். ஒருவர் குழி வெட்ட வேண்டும், ஒருவர் மரக்கன்றை நட வேண்டும், மூன்றாமவர் குழியை மூட வேண்டும், இன்று மரம் நடுபவர் விடுப்பில் சென்று விட்டார். நாங்கள் எங்கள் வேலையை விடாமல் செய்கிறோம்” என்றனர்
Posted by
Rajesh
குருகுலமும் பூனையும் !!
3:19 PM |
ஒரு குருகுலம். குரு மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தார். ஒரு பூனை அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தது. மாணவர்கள் பாடத்தைக் கவனிப்பதை விட்டுவிட்டு பூனையைக் கவனிக்க ஆரம்பித்தனர். இதைக் கவனித்த குரு பூனையைப் பிடித்து அருகில் இருந்த மரத்தில் கட்டச் சொன்னார். மறுநாளில் இருந்து பாடம் ஆரம்பிப்பதற்கு முன்பே பூனையைப் பிடித்து மரத்தில் கட்ட ஆரம்பித்தனர். ஒருநாள் குரு இறந்து போனார். அடுத்த குரு பொறுப்பேற்றுக்கொண்டார்.பாடம் நடத்த வந்து அமர்ந்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். கோபத்தில் அவர் முகம் சிவந்தது. “யாரங்கே? பாடம் நடத்த ஆரம்பிப்பதற்கு முன் ஒரு பூனையை மரத்தில் கட்ட வேண்டும் என்று தெரியாதா?” என்று கேட்டார்.
Posted by
Rajesh
நூறாவது ஜோக் !!!
ஒருமுறை ஒரு பந்தயம் நடைபெற்றது. அதில் நூறு
ஜோக்குகள் சொல்லப்படும். நூறு ஜோக்குகள் வரை யார் சிரிக்காமல்
இருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
போட்டி ஆரம்பித்தது. நிறைய பேர் கலந்து
கொண்டனர்.ஜோக்குகள் சொல்ல ஆரம்பித்தனர். முதல் ஜோக்
சொல்லியவுடன் சிலர் சிரித்து விட்டனர். போட்டி தொடர்ந்து நடைபெற்றது.
படிப்படியாக சிரித்தவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும்
சிரிக்கவே இல்லை. எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியம். அனைவரும்
அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். தொண்ணூற்று ஒன்பதாவது ஜோக்கும்
சொல்லப்பட்டது. இப்பொழுதும் அவர் சிரிக்கவே இல்லை. எல்லோரும் அவர்
நிச்சயம் ஜெயித்து விடுவார் என்று பேசிக்கொண்டிருந்தனர்.
நூறாவது ஜோக் சொல்லவேண்டும். ஜோக் சொல்பவர்
நூறாவது ஜோக் சொல்ல வை திறந்தார். இப்பொழுது கடகட வென சிரிக்கும்
சத்தம் கேட்டது. அந்த சிரிக்காத நபர்தான் சிரித்துக் கொண்டிருந்தார்.
எல்லோருக்கும் ஆச்சரியம். அவரிடம் போய் "ஏன்
இபொழுது சிரித்தீர்கள்? இன்னும் ஒரு ஜோக் தானே சிரிக்காமல்
இருந்திருக்கலாமே?" என்று கேட்டனர்.
அவர் " முதன் முதலில் சொன்னார்களே அந்த ஜோக்
இப்பொழுதுதான் புரிந்தது! வெரி நைஸ் !" என்று சொல்லிவிட்டு விழுந்து
விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்!!
Posted by
Rajesh
இப்படியும் யோசிக்கலாமோ?
4:05 PM |
ஒருமுறை அமெரிக்க அதிபரும், ரஷ்ய அதிபரும்
ரஷ்யாவில் கோல்ப் விளையாடினார்கள். இருவர் மட்டுமே விளையாடிய அந்த
போட்டியில் அமெரிக்க அதிபர் வெற்றி பெற்றார். இதை மறுநாள் செய்தியாக
வெளியிட்ட ரஷ்ய பத்திரிக்கைகள் இப்படி வெளியிட்டன.
நேற்று நடந்த கோல்ப் பந்தயத்தில்
நமது அதிபர் இரண்டாவதாக வந்தார்.
அமெரிக்க அதிபர் கடைசி நபருக்கு முந்தியவராக வந்தார்.
ரஷ்யாவில் கோல்ப் விளையாடினார்கள். இருவர் மட்டுமே விளையாடிய அந்த
போட்டியில் அமெரிக்க அதிபர் வெற்றி பெற்றார். இதை மறுநாள் செய்தியாக
வெளியிட்ட ரஷ்ய பத்திரிக்கைகள் இப்படி வெளியிட்டன.
நேற்று நடந்த கோல்ப் பந்தயத்தில்
நமது அதிபர் இரண்டாவதாக வந்தார்.
அமெரிக்க அதிபர் கடைசி நபருக்கு முந்தியவராக வந்தார்.
Posted by
Rajesh
சிந்தனைக்குச் சில துளிகள் !!!
3:55 PM |
சிந்திக்காமல் படிப்பது வீணானது -
படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது!
அநீதியான சமாதானத்தை விட
நியாயமான போரே மேல்...!
சரியானதெல்லாம் பிரபலமாவதில்லை-
பிரபலமானதெல்லாம் சரியானதில்லை!
உழுது பிழைப்பவன் ஒரு கோடி-
ஏய்ச்சு பிழைப்பவன் பல கோடி!
முயற்சிகள் தவறாகலாம் -
முயற்சிக்க தவறக்கூடாது!
உன்னை யாராவது ஒரு தடவை ஏமாற்றினால் அது அவன் தவறு-
இரண்டாவது முறையும் ஏமாற்றினால் அது உன் தவறு!
படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது!
அநீதியான சமாதானத்தை விட
நியாயமான போரே மேல்...!
சரியானதெல்லாம் பிரபலமாவதில்லை-
பிரபலமானதெல்லாம் சரியானதில்லை!
உழுது பிழைப்பவன் ஒரு கோடி-
ஏய்ச்சு பிழைப்பவன் பல கோடி!
முயற்சிகள் தவறாகலாம் -
முயற்சிக்க தவறக்கூடாது!
உன்னை யாராவது ஒரு தடவை ஏமாற்றினால் அது அவன் தவறு-
இரண்டாவது முறையும் ஏமாற்றினால் அது உன் தவறு!
Posted by
Rajesh
Subscribe to:
Posts (Atom)





