ஒருமுறை ஒரு பந்தயம் நடைபெற்றது. அதில் நூறு
ஜோக்குகள் சொல்லப்படும். நூறு ஜோக்குகள் வரை யார் சிரிக்காமல்
இருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
போட்டி ஆரம்பித்தது. நிறைய பேர் கலந்து
கொண்டனர்.ஜோக்குகள் சொல்ல ஆரம்பித்தனர். முதல் ஜோக்
சொல்லியவுடன் சிலர் சிரித்து விட்டனர். போட்டி தொடர்ந்து நடைபெற்றது.
படிப்படியாக சிரித்தவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும்
சிரிக்கவே இல்லை. எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியம். அனைவரும்
அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். தொண்ணூற்று ஒன்பதாவது ஜோக்கும்
சொல்லப்பட்டது. இப்பொழுதும் அவர் சிரிக்கவே இல்லை. எல்லோரும் அவர்
நிச்சயம் ஜெயித்து விடுவார் என்று பேசிக்கொண்டிருந்தனர்.
நூறாவது ஜோக் சொல்லவேண்டும். ஜோக் சொல்பவர்
நூறாவது ஜோக் சொல்ல வை திறந்தார். இப்பொழுது கடகட வென சிரிக்கும்
சத்தம் கேட்டது. அந்த சிரிக்காத நபர்தான் சிரித்துக் கொண்டிருந்தார்.
எல்லோருக்கும் ஆச்சரியம். அவரிடம் போய் "ஏன்
இபொழுது சிரித்தீர்கள்? இன்னும் ஒரு ஜோக் தானே சிரிக்காமல்
இருந்திருக்கலாமே?" என்று கேட்டனர்.
அவர் " முதன் முதலில் சொன்னார்களே அந்த ஜோக்
இப்பொழுதுதான் புரிந்தது! வெரி நைஸ் !" என்று சொல்லிவிட்டு விழுந்து
விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்!!






1 comments:
Haa !haa!! haa !!!super joke yaa
P.sermuga Pandian
Post a Comment