ஒரு குருகுலம். குரு மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தார். ஒரு பூனை அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தது. மாணவர்கள் பாடத்தைக் கவனிப்பதை விட்டுவிட்டு பூனையைக் கவனிக்க ஆரம்பித்தனர். இதைக் கவனித்த குரு பூனையைப் பிடித்து அருகில் இருந்த மரத்தில் கட்டச் சொன்னார். மறுநாளில் இருந்து பாடம் ஆரம்பிப்பதற்கு முன்பே பூனையைப் பிடித்து மரத்தில் கட்ட ஆரம்பித்தனர். ஒருநாள் குரு இறந்து போனார். அடுத்த குரு பொறுப்பேற்றுக்கொண்டார்.பாடம் நடத்த வந்து அமர்ந்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். கோபத்தில் அவர் முகம் சிவந்தது. “யாரங்கே? பாடம் நடத்த ஆரம்பிப்பதற்கு முன் ஒரு பூனையை மரத்தில் கட்ட வேண்டும் என்று தெரியாதா?” என்று கேட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)






5 comments:
ராஜேஷ் தாங்கள் சிந்தனை உருப்படியாகவும், சிந்திக்கும்படியும் இருக்கிறது!. இந்த வலைப்பூ பரந்த வாசகர் வட்டத்தை சென்றடைய வாழ்த்துக்கள்!
asathal mannaragi viteergal. vazhthugal sinthanai thodara...
Dear Rajesh
It is story which depicts correctly how our foolish practices are evolved when they are observed continuously without asking any question such as why?
P.Sermuga Pandian
நன்றி மீனாள் மேடம்.
நன்றி மதி சார்! உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!
Post a Comment